கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களின் ஐந்து பெண்கள் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களின் ஐந்து பெண்கள் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 10,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,271 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 1,202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 74 பேர் உயிரிழந்த நிலையில் சென்னையில் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ராயபுரம், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 2 பெண்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் என 5 பெண்கள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.