சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கடைக்கு ரோபோவை அனுப்பிய கோவை இளைஞர்..!

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கடைக்கு ரோபோவை அனுப்பிய கோவை இளைஞர்..!

கொரோனா வைரஸ் எளிதாகத் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளதால் அதற்காக ஒரு பிரத்தியேக ரோபோவை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக் என்பவர்  கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் இருந்தால் கொரோனா வைரஸ் எளிதாகத் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளதால் அதற்காக ஒரு பிரத்தியேக ரோபோவை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

தற்போது கோவையில் வசித்து வரும் இவரின் ரோபோ சமீபத்தில் வெரைட்டி ஹால் சாலையிலுள்ள  ஒரு டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று சரக்கு வாங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அவர் கூறுகையில்“என் ரோபோ சரக்கு வாங்கிட்டு வீட்டுக்கு வரதுக்கு ஒரு மணி நேரம் ஆச்சு” என்று சிரித்துக்கொண்டே கூறினார் கார்த்திக். மேலும் அவர் கூறுகையில், “டாஸ்மாக் திறந்த முதல் நாள் கட்டுக்கடங்கா கூட்டம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது.  உடனே இதற்கான தீர்வாக ஒரு ரோபோ தயாரிப்பில் இறங்கினேன். என்று கூறினார்.

அந்த ரோபோவை பசங்க ஓட்ற சைக்கிள் சக்கரம் நான்கு வைத்து, ஒரு கியரோட, சென்சார் மாதிரியானவைகளை சேர்த்து என் மொபைலோட கனெக்ட் பண்ணி இந்த ரோபோவை உருவாக்கினேன்” என்று கூறினார்.

இந்த ரோபோவை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபரேட் செய்து கொள்ளலாம்.  வரிசையில் நின்ற இந்த ரோபோ டாஸ்மாக் கடையை அடைந்ததும் அங்கிருந்த ஊழியர் எடுத்து வைத்த மது வகைகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து, அதற்கான தொகையை  டிரான்ஸ்பர் செய்து வெற்றிகரமாகக் கொள்முதலை முடித்துச் சென்றுள்ளது.  இவையனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுள்ளது.  

வெளிநாடுகளில் சுகாதாரத் துறையில் இது போன்ற ரோபோக்களின் பங்களிப்பு மிக அதிகம்.  இந்த ரோபோவை மருத்துவ மற்றும் சுகாதார பணிகளில் பயன்படுத்துவது கொரோனா தொற்றைத் தடுக்க பெரிதும் உதவும்” என்று கார்த்திக் கூறினார்.

கொரோனா பரவல் அச்சத்தில் மக்கள் இருக்க கடைகளுக்கு செல்லவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் இதுபோன்ற கண்டுபிடிப்புக்கள் உபயோகமாக இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com