தமிழ்நாடு: 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமைச்செயலாளர் உத்தரவு

தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துறை செயலர்கள் உள்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட மேலும் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப் தஞ்சை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேப்போல் கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com