பணியாளர் இல்லாத பேக்கரி: ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை வைத்து செல்லும் மக்கள்!

பணியாளர் இல்லாத பேக்கரி: ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை வைத்து செல்லும் மக்கள்!
கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மக்களின் பசியாற்ற நினைத்த அவர், செல்ஃப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்

இதன்படி, கடையின் முன்பு ரொட்டி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பணியாளர்கள் யாரும் கிடையாது. ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும் அதனை எடுத்துக்கொண்டு பணத்தை அருகில் உள்ள பெட்டியில் வைத்து விட்டுப் போகவும் என எழுதி வைத்துள்ளார். அதன்படி மக்கள் அனைவரும் ரொட்டியை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை வைத்து விட்டு செல்கின்றனர்.

நாளொன்றுக்கு 100 முதல் 150 பாக்கெட்டுகள் விற்பனையாவதாக உரிமையாளர் கூறியுள்ளார். மக்களின் பசியை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இதனை செய்ததாகவும் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் முறையாக பணத்தை வைத்து விட்டு போவதாகவும், உணவின்றி தவிப்பவர்களுக்கு ரொட்டி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்