கமல்ஹாசனின் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ் அகற்றம்; சென்னை மாநகராட்சி விளக்கம்

கமல்ஹாசனின் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ் அகற்றம்; சென்னை மாநகராட்சி விளக்கம்
நடிகர் கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. கமல்ஹாசனுக்கு கொரோனா இருக்கிறதா என கேள்வி எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீசை அகற்றினர். இது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில்,, "கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று தாயகம் திரும்பியதால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு கமல்ஹாசனின் பழைய வீட்டு முகவரியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இருப்பினும் கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் நோட்டீஸ் அகற்றப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்