144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் - தோப்புக்கரணம் போடவைத்த காவல்துறையினர்கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவை மீறி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தேவையில்லாத காரணங்களுக்கு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 144 தடை உத்தரவை மீறி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர். பின்னர் அவர்களுக்கு கொரொனாவின் பாதிப்பு மற்றும் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்