அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது - அமைச்சர் எச்சரிக்கை

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது நடவடிக்கை பாயும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளைபயன்படுத்தி செயற்கையாக விலையேற்றத்தை உருவாக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணப் பொருட்கள், ஊக்கத்தொகை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

ஊழல் மிகுந்த இந்து அறநிலைத்துறை?
