ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு - காவல்துறையின் காட்டுப்பாட்டுக்குள் வந்தது தமிழகம்கொரொனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்துவதாகவும், பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் முக்கியம் என தெரிவித்தார்.  அதன்படி  ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தும், எச்சரிக்கை செய்தும் வருகின்றனர். இந்நிலையில்  கரூரில் 144 தடை உத்தரவை மீறியதாக 23 பேர் கைது செய்யப்பட்டு 6 வாகனங்கள் பறிமுதல்

 செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 220 பேர் மீது 93 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை யில்  6 பேர் மீது வழக்கு  பதிவுசெய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில்  1,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 வாகனங்கள் பறிமுதல்   செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்றும், இதனால் மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்