எனது வீட்டை மருத்துவ மய்யமாக்கி உதவத் தயார்.. கமல்ஹாசன் ட்வீட்!

உலகளவில் கொரோனா வைரசால் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டை தற்காலிக மருத்துவ மையமாக மாற்றத் தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்' என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்