இன்று மாலை முதல் தேநீர் கடைகளை மூட உத்தரவு...!

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்தும் மாநிலங்களுக்கும் பொருந்தும். தமிழகத்திலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் பலர் வெளியே சுற்றித்திரிகிறார்கள். இளைஞர்கள் பலர் பைக்கில் ஆளில்லாத ரோட்டில் செல்வதும், கடைகளில் 5 பேருக்கு மேல் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களின் இந்த நடமாட்டத்தை குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து தேநீர் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் காய்கறிகளை மட்டுமே வீட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்