நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு… முதல்வர் ஆலோசனை கூட்டம்…

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18ஆக உள்ள நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த ஒரு நபர் உயிரிழந்தார். முன்னதாக தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிமுதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு பிரதமர் மோடி பேசுகையில், நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தலைமை செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இதில்  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்