விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு : சிபிசிஐடி தொடர்ந்த மனுவில் நீதிபதி அதிரடி உத்தரவு

11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தொடர்ந்த மனுவிவில் நீதிபதி புஷ்பராணி இந்த உத்தரவை வழங்கினார்.
விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு : சிபிசிஐடி தொடர்ந்த மனுவில் நீதிபதி அதிரடி உத்தரவு

மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலிசார்க்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்ய சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உயிரிழந்த குடும்பத்தாரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கிய குப்பம் மீனவர் பகுதியில் உள்ள வம்பா மேடு என்ற இடத்தில் தொடர்ந்து ஒரு சிலர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இப்பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் மரக்காணம் சம்புவெளி தெருவை சார்ந்த ஒரு நபர் மரக்காணம் செல்லன் தெருவில் இரண்டு பேர் மரக்காணம் நகரான் தெருவில் ஒரு நபர் உள்பட 14 பேர் உயிரிழந்து விட்டனர்.

மேலும் சிலர் முண்டியம்பாக்கம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு மெத்தனால் கலந்த எரி சாராயத்தை குடித்து உயிரிழந்த சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மரக்காணம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த ஆறு பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகள் இரண்டு பேர், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் இரண்டு பேர், மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த ஓட்டுநர், மற்றும் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பிரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பதினோரு பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக ஏடி.எஸ்.பி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் குழுவினர் நேற்று மாலை 23-ம் தேதி மரக்காணம் காவல் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து எரி சாராயம் குடித்து அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியான எக்கியர் குப்பத்திற்கு சென்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலிசார்க்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com