மனைவி இறந்த சோகம்… கணவர் விபரீத முடிவு!

மனைவி இறந்த சோகம்… கணவர் விபரீத முடிவு!

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்(42).

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்(42). இவரது மனைவி இந்துமதி உடல்நலக்குறைவால்  சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த சுந்தர், மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். 

இந்நிலையில் தனது மகன்கள் சுனில்(13) மற்றும் விமல்(9) ஆகியோருக்கு நேற்று இரவு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் தந்தையும், இரண்டு மகன்களும் இறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com