சென்னையில் வாகன ஓட்டியை கட்டையால் தாக்கிய போலீஸ்காரர்- மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


சென்னையில் ஹெல்மட் அணியாமல் சென்ற இளைஞரை போலீஸ்காரர் ஒருவர் கட்டையால் தாக்கிய விவகாரம் தொடர்பாக டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


சென்னை ஒட்டேரியில் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில்  சுரேந்தர்  என்பவர் ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரமேஷ் அந்த இளைஞரை, தடுத்து நிறுத்தி தலையில் கட்டையால் காட்டுமிராண்டிதனமாக  தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் குற்றம் செய்திருந்தாலும் கூட அதற்காக அபராதம் விதிப்பதை விட்டு விடடு எதற்காக கட்டையில் தாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில், இது தொடர்பாக  டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையர் இருவரும் பதிலளிக்க வேண்டும் என்று  மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்