ஏடிஎம் வரும் முதியவர்களை குறிவைத்து மோசடி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் மையங்களுக்கு வரும் முதியவர்களை ஏமாற்றி மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்து வந்தார். அந்த மர்ம நபரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 55 வயதான சிவலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் காவல்படையில் பணியாற்றியவர், அந்தப் பணியில் இருந்து இடையிலேயே நின்று விட்டடார். அதன்பிறகு போலீஸ்காரர் போல போலியாக அடையாள அட்டை வைத்துக் கொண்டு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏடிஎம் மையங்களுக்கு தனியாகப் பணம் எடுக்க வரும் முதியவர்களை குறிவைத்து அவர்களிடம் பணத்தை பறித்துச் சென்றிருக்கிறார். 

இந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல ஏடிஎம் கார்டுகள் மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டையையும் கைப்பற்றினர்.  திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்