மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது


அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி ,பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 3  மாணவிகள் மது வாங்கி காட்டு பகுதி சென்று அதனை பகிர்ந்து குடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது சம்பந்தப்பட்ட அந்த மூன்று மாணவிகளின்  பெற்றோர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது.
 
மாணவிகள் மது அருந்தும் வீடியோவை கண்டு கல்வியாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மது அருந்தும் பழககம் பள்ளி மாணவிகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், இனிமேலாவது தமிழக அரசு  உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்