”பிப்.14 கறுப்பு இரவு”… இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம்..

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், #CAA_NRC_NPRக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவி, பிப்ரவரி 14ஆம் நாள் இரவை கறுப்பு இரவாக்கிய முதல்வர் பழனிசாமி அரசின் காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தைத் தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சி இது!” என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்