தமிழக பட்ஜெட்: அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா!

தமிழக பட்ஜெட்: அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா!

2020-21ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதில் முக்கிய அறிவிப்பாக அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு ரூ.329.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடியும், மின்சாரத்துறைக்கு ரூ.20,115.58 கோடியும், சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்