தக்கலையா? தக்காளியா? இணையத்தில் பரவும் பயணச்சீட்டு!

மதுரை மாவட்டம் அரசு பேருந்து பணிமனை போடி கிளையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு தினமும் காலை அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. மில்டன் என்ற பயணி ஒருவர் மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை செல்வதற்காக இந்த பேருந்தில் ஏறியுள்ளார். 

அவருக்கு வழங்கப்பட்ட மின்னணு பயணச் சீட்டில் தக்கலை என்ற பெயருக்கு பதிலாக தக்காளி என குறிக்கப்பட்டிருந்தது. இதனை அந்த பயணி போட்டோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டுவைக்கவில்லை. வடிவேலு புகைப்படங்களுடன் இந்த பயணச் சீட்டையும் இணைத்து காமெடியான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்