தமிழகத்தில் வெட்டுக்கிளி பிரச்சினை இருக்காது..

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை போல் வெட்டுக்கிளி தொந்தரவு தமிழகத்தில் இருக்காது என  தமிழக வேளான்துறை முதன்மை செயலர் ககந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வேளான் துறை முதன்மை செயலர் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் சமீப காலமாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைக்கு தயரான பயிர்களை  வெட்டுக்கிளி காலி செய்தது. இதனால் விவசாயிகள் பலர் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயராக உள்ளதால் பயிர்களை வெட்டுக் கிளி தாக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக வேளான்துறை முதன்மை செயலார் ககந்தீப் சிங் வட மாநிலங்களை பதம் பார்த்த வெட்டுக் கிளி பிரச்சினை தமிழகத்தில் இருக்காது எனவும் விவசாயிகள் அறுவடைகளை அச்சமின்றி மேற்கொள்ளலாம் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தீமை செய்யும் பூச்சிகளை கொல்லாமல்,மாற்றாக நன்மை செய்யும் பூச்சிகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.  பூச்சிக் கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும் எனவும், விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்