தமிழகத்தில் 6 மற்றும் 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 6 மற்றும் 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மழை பொய்த்து போனது. மழைக்காலமும் முடிந்து பனிக்காலமும் முடிந்து இப்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை தொடங்கியதுமே பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் பணியை துரிதப்படுத்திவிட்டது.
வெயில் தொடர்பாக சென்னை மண்டல வானிலைஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வருகிற 6ம் தேதி, 7ம் தேதிகளில் தமிழகத்தில் திருப்பூர்,
தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல்3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் இன்று இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக உள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 33 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.