சென்னை மாநகராட்சியில் உள்ள மசாஜ் சென்டர்களை முறைபடுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள மசாஜ் சென்டர்களை முறைபடுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை பொறுத்தவரை ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் தங்கள் வேலை பளு காரணமாக ஸ்பா சென்டர்களுக்கு சென்று மசாஜ் செய்துகொள்வதுண்டு .இதனாலேயே பெரும்பாலான ஸ்பா சென்டர்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.ஆனால் சமீபகாலமாக இதுபோன்ற மசாஜ் சென்டர்களில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தன.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து முறையாக பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி மசாஜ் சென்டர்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொறுத்த வேண்டும் எனவும் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.