ஒரே நாளில் மாயமான 4 மாணவிகள்! சென்னையில் அதிர்ச்சி!!

சென்னையில் ஒரே நாளில் 10ஆம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற அவர்களின் பெற்றோர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

 • உண்மை தான்
  68.37%
 • இல்லை
  8.16%
 • பொய்யான குற்றச்சாட்டு
  17.35%
 • கருத்து கூற விரும்பவில்லை
  6.12%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்