வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. தேர்தலை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் இந்த திட்டம் கட்சி சார்பானதோ அல்லது தேர்தலுக்கான அறிவிப்போ இல்லை என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான தொழிலாளர் விவரங்களும், கணக்கெடுப்பு பணிகளும் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதன் தொடக்கமாக, இன்று சில பயனாளிகளின் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபயை செலுத்தி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் இந்த சிறப்பு நிதி செலுத்தப்படவிருக்கிறது.