வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலி ஒன்றை நடிகர் விஜய்சேதுபதி தத்தெடுத்தார்
சென்னை, வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வன விலங்குகள், பறவைகள் வளர்க்கப்படுகிறது. இதனைப் பார்ப்பதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
இந்தப் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலி ஒன்றை நடிகர் விஜய்சேதுபதி தத்தெடுத்தார். இதற்காக, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய் சேதுபதி, அதற்கான செலவுத் தொகையான 5 லட்சம் ரூபாயை, பூங்கா இயக்குநரிடம் வழங்கினார்.
இந்த தொகையைக் கொண்டு பூங்காவில் உள்ள் விலங்குகள் பராமரிப்புக்கு செலவு செய்யப்படுகிறது. இதேபோல், சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு புலிக்குட்டியை தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.