6வது நாளாக விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்; வாழைகள் சேதம்…

6வது நாளாக விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்; வாழைகள் சேதம்…

6வது நாளாக விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்; வாழைகள் சேதம்…

ஆம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தக்காளி, துவரை போன்ற பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள ஓணாங்குட்டை ஸ்ரீராமலு என்பவருக்கு சொந்தமான தங்காளி தோட்டம், சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டம், ஏகநாதன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான துவரைப் பயிர்கள், கல்யாணி என்பவருடைய தக்காளி தோட்டம் ஆகிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்ததில் சேதம் அடைந்துள்ளது.

யானைகளை விரட்டும் பணியில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்னர். தொடர்ந்து 6வது நாளாக திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com