சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம்… மத்திய அரசு அறிவிப்பு

சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம்… மத்திய அரசு அறிவிப்பு
சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம்… மத்திய அரசு அறிவிப்பு

சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம்… மத்திய அரசு அறிவிப்பு

நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேச மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், மாநிலங்களின் செயல்திறன்கள், வேளாண்மை மற்றும் துணைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளர்ச்சி, நீதி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே, தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ளது. 

மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முதலிடத்திலும், இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா, கர்நாடகாவும் உள்ளது. சத்தீஸ்கர் நான்காவது இடத்தையும், ஆந்திரா (ஐந்தாவது), குஜராத் (ஆறாவது), ஹரியானா (ஏழாவது), கேரளா எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்நிலையில், யூனியன் பிரதேச மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com