யூடியூப் சேனல் பார்த்து திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

யூடியூப் சேனல் பார்த்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கு சென்று பயிலும் மாணவர்கள் திருட்டில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. 

கடலூர் விருத்தாசலம் மங்கலம்பேட்டை பகுதியிலுள்ள செல்போன் கடை மற்றும் பள்ளிகளில் செல்போன்கள், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்போன், லேப்டாப் மீதுள்ள ஆசையில் யூடியூப் சேனலை பார்த்து எப்படி திருடுவது எனக் கற்றுக்கொண்டு திருடியதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 7 லேப்டாப், 4 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார், அந்த 3 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்