காவல்நிலையம் முன் மனைவியை கத்தியால் குத்திய கணவர்.. போலீசார் அதிர்ச்சி!

சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் தனது மனைவியை காணவில்லை என காவல்நிலையத்த்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 12ம் தேதி மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவருடன் அவரது மனைவி காவல்நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதனால் வீரமணியை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். அங்கு வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். அதன் பிறகு தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காவல்நிலையம் முன் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்