திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தை வரவேற்ற கருணாநிதி.. பாஜக பகீர் தகவல்..

திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தை வரவேற்ற கருணாநிதி.. பாஜக பகீர் தகவல்..

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் காவி  உடை அணிந்துள்ள மாதிரியான போட்டோவை பதிவிட்டுள்ளது, பல்வேறு சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் கே.டி.ராகவன்,  இது தொடர்பாக பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 1969ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, புலவர் தெய்வநாயகம் எழுதிய திருவள்ளுவர் கிறித்தவரா என்ற புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதியதாகவும், 

அதில், திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை,  நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தனையை தூண்டக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே திருவள்ளுவர் கிறித்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புறத்தோன்றும். ஆனால் திருவள்ளுவர் ஹிந்துன்னா கசக்குமா திமுகவிற்கு என்று கே.டி.ராகவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்