வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு, இவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சாக்லேட் கொடுத்து சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் உடலில் இருந்த காயங்களை கண்ட பெற்றோர், அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ரூ.1500 அபராதமும் விதித்துள்ளனர். அதே போல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளனர்.