புத்தக தாத்தா காலமானார்!

புத்தக தாத்தா காலமானார்!

புத்தக

தாத்தா காலமானார்!

 

புத்தக தாத்தா என்று அழைக்கப்பட்ட முருகேசன் உடல்நலக் குறைவால்

காலமானார்.

 

மதுரை மாவட்டம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் 2ம்

வகுப்பு மட்டுமே படித்தவர்.  பழைய பேப்பர் கடை

வைத்து நடத்தி வந்தார்.

கடைக்கு வரும் புத்தகங்களை மட்டும் தனியாக பிரித்து சேகரிக்க

தொடங்கினார்.

 

ஆசிரியர்கள் சிலர் அந்த புத்தகங்களை ஆர்வமாக வாங்கிச் சென்றதையடுத்து,

அதிகளவு புத்தகங்களை சேகரிக்க தொடங்கினார்.

நாளடைவில் தான் சேகரித்த அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும்

பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கி வந்தார்.

இதனால் மாணவர்கள் இவரை புத்தக தாத்தா என்று அழைத்தனர். எளிதில்

கிடைக்காத ஆராய்ச்சி புத்தகங்களை வழங்கி வந்தார்.

தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் புத்தகங்களை சேகரித்து

வைத்திருந்த முருகேசன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவர் மறைவிற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் என பல தரப்பினரும்

இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்