35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த காதலர்!

35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த காதலர்!

35
ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த காதலர்!

 கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் ஜெயம்மா. இவருக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு
முன்பு திருமணம் நடந்தது. ஜெயம்மாவுக்கு குழந்தை இல்லாததால் அவருடைய கணவர், ஜெயம்மாவுக்கு
30 வயது இருக்கும் போது அவரை விட்டுச் சென்றுவிட்டார்.

 இதன் பிறகு அதே பகுதியைச் சேர்ந்த சிக்கண்ணா என்பவர் ஜெயம்மாவை காதலித்தார்.
ஆனால், குடும்பக் காரணங்களால் சிக்கண்ணாவின் காதலை ஜெயம்மா ஏற்கவில்லை.தனது காதலை ஏற்காததால் ஜெயம்மாவை நினைத்து கடந்த 30 ஆண்டுகளாக திருமணம் செய்து
கொள்ளாமல் இருந்தார் சிக்கண்ணா.

 இந்நிலையில் 35 ஆண்டுகள் கடந்த நிலையில், சிக்கண்ணாவின் காதலை ஏற்று அவரை திருமணம்
செய்ய சம்மதித்தார் ஜெயம்மா. இதைத் தொடர்ந்து மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் சம்பிரதாய
முறைப்படி எளிமையாக திருமணம் நடந்தது.35 ஆண்டுகள் கழித்து காதலர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த புதுமணத்
தம்பதியை ஊர்மக்கள் வாழ்த்தினர்.

 

Find Us Hereஇங்கே தேடவும்