மனித குலத்துக்கு ஆப்பு ரெடி!!

யானைகள் இறப்பு அதிகரிப்பு

யானைகள் இறப்பு அதிகரிப்பு

மனித குலத்துக்கு ஆப்பு ரெடி!!

காடுகளை உருவாக்குவதில் யானைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உணவுச் சங்கிலியில் சிக்கல் ஏற்படும் போது, மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக முடியும். ஒரு யானையால் ஒரு காட்டைஉருவாக்கிட முடியும். 

யானைகளின் எண்ணிக்கை குறையும் போது, அது சூழியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

இந்தியாவில் யானைகள் கொல்லப்படுவது அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு யானைகள் திட்ட வல்லுனரும், தலைமை பொது தகவல் அலுவலருமான முத்தமிழ் அளித்துள்ள பதில்: கடந்த 2020 டிசம்பர் 31 வரை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. 

அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன. தமிழகத்தில் ஐந்து யானைகள் பலியாகியுள்ளன. மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன. இதில் அதிக படசமாக ஒடிசாவில் 133, தமிழகத்தில் 93 யானைகள் இறந்துள்ளன. இதே கால கட்டத்தில், விஷம் வைத்தும் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. 

இதில், அதிகபட்சமாக அசாம்  மாநிலத்தில் 32 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு யானை கொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணெக்கெடுப்பின் படி நாடு முழுதும் 29 ஆயிரத்து 964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவில் 6049, அசாமில் 5719, கேரளாவில் 5706, தமிழகத்தில் 2761 யானைகள் உள்ளன. நாடு முழுதும் யானைகளை பாதுகாக்க, 10 ஆண்டுகளில் 212.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

யானைகள் அழிப்பு என்பது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூன்யம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Find Us Hereஇங்கே தேடவும்