விளையாட்டு
இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர்: தமிழ்நாட்டை சேர்ந்த ஆதவ் அர்ஜுன் தேர்வு
டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் 38:01 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஆதவ் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கான தேர்தலில் ஆதவ் அர்ஜுன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். மேலும், இவர் சென்னை நேரு விளையாட்டு மைதானத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் தங்கி படித்தவர். இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு தடைகளும் முறைகேடுகளும் நடைபெற்றன. இந்த நிலையில், ஆதவ் அர்ஜுன் டெல்லி உயர்நீதிமன்றம் சென்று, முறைகேடுகளுக்கு தடைப்பெற்று, நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
இன்று டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் 38:01 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஆதவ் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.