என் குழந்தை மீது சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல.... ஸ்ரீசாந்த் ஓபன் டாக்

என் குழந்தை மீது சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல.... ஸ்ரீசாந்த் ஓபன் டாக்

2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடைவிதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டி தொடரில் 2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக அவருக்கு வாழ்நாள் தடைவிதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

ஆனால் ஸ்ரீசாந்த மீதான வாழ்நாள் தடையை நீக்க மூன்று மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்யலாம் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்கியது. இந்நிலையில் தன்மீது தவறு இல்லை என தற்போது ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ”என் குழந்தை மீது சத்தியமா சொல்கிறேன், கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத என் அப்பா மீது சத்தியமா சொல்கிறேன், சில மாதத்துக்கு முன்பாக இடதுகால் துண்டிக்கப்பட்ட என் அம்மா மீதும் சத்தியமாக சொல்கிறேன், நான் அந்த தவறை செய்யவில்லை. எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை செய்யவும் மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ”அந்த தவறை செய்துவிட்டு தற்போதும் சிலர் சிரித்த முகத்தோடு கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அவர்களை என்னால் ஆதாரத்துடன் அடையாளம் காட்ட முடியும். ஆனால் அந்த சின்னத்தனமான செயலை நான் செய்ய விரும்பவில்லை”எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com