ஒரே போட்டியில் 2 சாதனை படைத்த இலங்கை அணி கேப்டன் சமாரி அதபத்து..!

ஒரே போட்டியில் 2 சாதனை படைத்த இலங்கை அணி கேப்டன் சமாரி அதபத்து..!
ஒரே போட்டியில் 2 சாதனை படைத்த இலங்கை அணி கேப்டன் சமாரி அதபத்து..!

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சமாரி பதபத்து, 66 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஒரே போட்டியில் 2 சாதனைகளை படைத்துள்ளார்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சமாரி பதபத்து, 66 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஒரே போட்டியில் 2 சாதனைகளை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சிட்னியின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை 113 ரன்கள் எடுத்தார். 

இதனைதொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், இலங்கை அணி கேப்டன் சமாரி அதபத்து, 2 சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 66 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டி20 போட்டியில், சதம் கடந்த முதல் இலங்கை பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் சேஸிங்-கின் போது சதம் கடந்த முதல் பெண்கள் அணி கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com