தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்ற பிசிசிஐ... முடிவுக்கு வந்தது சர்ச்சை...

தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்ற பிசிசிஐ... முடிவுக்கு வந்தது சர்ச்சை...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 

அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்,  வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரிமீயர் லீக் போட்டி தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி போட்டிக்கு சென்றிருந்தார். 

அத்துடன் அவர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில் அந்த அணியின் ஜெர்ஸி அணிந்து இருந்த போட்டோ இணையத்தில் வைரலானது. இந்த போட்டோவில் அவருடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமும் உடன் இருந்தார். 

இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி பிசிசிஐ,  தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் இதுகுறித்து விளக்கம் அளித்து பிசிசிஐக்கு கடிதம் எழுதினார்.அதில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினேஷ் கார்த்திற்கு வந்த சிக்கலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com