ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் பங்கேற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நல்ல பார்மில் உள்ளன. மேலும் ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும்.
மேலும் இந்திய அணியை பொருத்த வரையில் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் சதம் அடித்த ரோகித் சர்மா இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்திய அணியின் பந்துவீச்சும் நல்ல பார்மில் உள்ளது.இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அணி விவரம்…
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா. ஸ்டீவன் சுமீத், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பர்.
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.