ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பயிற்சியின் போது பந்துவீச்சாளர் தலையில் பந்தை அடித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பயிற்சியின் போது பந்துவீச்சாளர் தலையில் பந்தை அடித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30ம் தேதி கோலகலாமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் லீக் ஆட்டத்தில் இன்று நடக்க இருக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பேட்டிங்கில் ஈடுப்பட்டனர். அதில் டேவிட் வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார்.
நன்றாக விளையாடிக்கொண்டிருந்த வார்னர் ஒரு பந்தை அடிக்க அது எதிர்பாராத விதமாக பந்துவீச்சாளர் ஜெய்கிஷன் பிளாஹா மீது பலமாக விழுந்தது. உடனே ஜெய்கிஷன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பதறிய வர்னர் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அவரை தேற்றினர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் குழு விரைந்து வந்து முதலுதவி செய்து பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.