உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதே போல் 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதனால் இந்த முறை விராட் கோலி தலைமையில் அமைந்துள்ள அணியின் வெற்றியை எதிர்நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விராட் கோலி, 8ம் வகுப்பு வரை டெல்லியின் உத்தம்நகரில் உள்ள விஷால் பாரதி பப்ளிக் பள்ளியில் படித்துள்ளார். அங்கு தான் அவருடைய கிரிக்கெட் பயணம் ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில் அவர் உலகக் கோப்பை போட்டியில் சாதிக்க வேண்டும் என வாழ்த்தி, அவருடைய பள்ளி நிர்வாகம் அவர் விளையாடிய மைதானத்தில் இருந்து மண்ணை எடுத்து லண்டனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் தோனி, பும்ரா, ஹர்திக் உள்ளிட்டோரின் பள்ளிகளில் இருந்தும் மண்ணை எடுத்து அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர்.