இராமநாதபுரம்: கடலில் 11 மணி நேரம் நீந்தி சாதனை - பேராசிரியைக்கு குவியும் பாராட்டு

இராமநாதபுரம்: கடலில் 11 மணி நேரம் நீந்தி சாதனை - பேராசிரியைக்கு குவியும் பாராட்டு
இராமநாதபுரம்: கடலில் 11 மணி நேரம் நீந்தி சாதனை - பேராசிரியைக்கு குவியும் பாராட்டு

45 வயதில் 11 மணி நேரம் கடலில் நீந்தி சாதனை படைத்த பேராசிரியர்

டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மீனாட்சி பகுஜா [45] இவர் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மற்றும் விசைப்படகில் மதுரை மாவட்ட நீச்சல் சங்க குழுவினருடன் இணைந்து 13 நபர்கள் நேற்று மாலை 4 மணி மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் இலங்கை தலைமன்னார் பகுதிக்குச்  சென்றடைந்துள்ளனர்.

பின்னர் இலங்கைத் தலைமன்னாரிலிருந்து இரவு 10 மணி அளவில் மீனாட்சி பகுஜா கடலில் நீந்த துவங்கியுள்ளார்.11 மணி நேரம் கடலில் நீந்தி இன்று காலை 9 மணிக்குத் தனுஷ்கோடி வந்தடைந்தார்.தனுஷ்கோடி வந்த அவருக்கு மீனவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுங்கத்துறை அதிகாரிகள் சாதனைக்கான கேடயத்தை வழங்கி கௌரவித்தனர்.45 வயதான மீனாட்சி பகுஜா 11 மணி நேரம் கடலில் நீந்தி சாதனை படைத்த அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com