இந்தியாவுடன் கிரிக்கெட்; பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை என்ன?

இந்தியாவுடன் கிரிக்கெட்; பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை என்ன?
இந்தியாவுடன் கிரிக்கெட்; பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை என்ன?

போட்டியின் அட்டவணைப்படி மைதானப் பிரச்சினைகளில் உள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கு மோடி ஐயா அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். 
இந்தியா -பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என மோடி ஐயா அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்திய கிரிக்கெட் வாரியம் நினைத்தால் 2 நாடுகளுக்கும் இடையே போட்டி நடைபெறுவதை உறுதி செய்ய முடியும். நீங்கள் அதிகம் எதிரிகளை உருவாக்கக் கூடாது. அதிகமான நண்பர்களை உருவாக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 
இந்தியாவும், பாகிஸ்தானும் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் மோதிக் கொண்டன. அடுத்ததாக இந்தாண்டு ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் மோதிக்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போட்டியின் அட்டவணைப்படி மைதானப் பிரச்சினைகளில் உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்படாது, மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை அதன் சொந்த நாட்டில் நடத்துவதில் குறியாக உள்ளது. ஆகையால் சிக்கல் எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com