7 மாநிலங்கள் கலந்து கொள்ளும் ஜுனியர் மகளிர், ஹாக்கி போட்டி இன்று துவக்கியது.
ராமநாதபுரத்தில் முதன் முறையாக ஏழு மாநிலங்கள் பங்கேற்கும் ஹாக்கி இந்தியா போட்டிகள் இன்று துவக்கம். முதல் போட்டியாக கர்நாடகா மற்றும் புதுச்சேரி மகளிர் அணிகள் மோதியதில் கர்நாடக மகளிர் அணி 16-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வதேச தரத்தில் உள்ள வேலு மாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் முதன்முறையாக தென் மண்டல அளவிலான 7 மாநிலங்கள் கலந்து கொள்ளும் ஜுனியர் மகளிர், ஹாக்கி போட்டி இன்று துவக்கியது.
இதில் 18 வயதுக்கு உட்பட்ட மகளிர் ஹாக்கி விளையாட்டு போட்டி 19ஆம் தேதி இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெலுங்கானா ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இன்று துவங்கிய முதல் போட்டியில் கர்நாடகா ஹாக்கி மகளிர் அணியும், புதுச்சேரி ஹாக்கி மகளிர் அணியும் மோதின, இதில் அபாரமாக விளையாடிய கர்நாடகா ஹாக்கி மகளிர் அணி 16 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் புதுச்சேரி ஹாக்கி மகளிர் அணியை தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேஷ் ஹாக்கி மகளிர் அணியும், கேரளா ஹாக்கி மகளிர் அணியும் தொடர்ந்து மோதுகின்றன.
பின்னர் தமிழ்நாடு ஹாக்கி மகளிர் அணி மற்றும் தெலுங்கானா ஹாக்கி மகளிர் அணி மோத இருக்கின்றன. பின்னர் இன்று மாலை கேரளா ஹாக்கி ஆடவர் அணியும், தெலுங்கானா ஹாக்கி ஆடவர் அணியும் விளையாடுகின்றனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஹாக்கி ஆடவர் ஹாக்கி அணியும், புதுச்சேரி ஹாக்கி ஆடவர் அணியும் விளையாடுகின்றனர். கேரளா ஹாக்கி ஆடவர் அணியும் ஆந்திர பிரதேஷ் ஹாக்கி ஆடவர் அணியும் விளையாட இருக்கின்றன.