ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் இருப்பதாக வரும் செய்தியில் உண்மை இல்லை
ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் இருப்பதாக வரும் செய்தியில் உண்மை இல்லை என்று ஷுப்மன் கில் கூறியுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்து வருபவர் ஷுப்மன் கில். ஒருநாள், டி20 என இரண்டிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியவர். இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மைதானத்தில் பல சாதனைகளை படைத்து வந்த அவரை சுற்றி பல கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. அப்படியிருக்க அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், நடிகை ராஷ்மிகா மீது தனக்கு க்ரஷ் இருக்கிறது என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவ, ஷுப்மன் கில் இது குறித்து இன்ஸ்டாகிராம் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளார். ‘இது போன்று ஒரு நேர்காணல் நடந்ததாக தனக்கே தெரியவில்லை’ என்று அவர் பதிவிட்டு இந்த செய்தியில் உண்மை இல்லை என்பதை கூறியுள்ளார்.