உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பும்ரா பங்கேற்பது கேள்விக்குறி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பும்ரா பங்கேற்பது கேள்விக்குறி என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்
காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியிருக்கிறார். சென்ற ஆண்டு செப்டம்பரில் விலகிய அவர், நவம்பரில் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் காயத்தில் இருந்து மீளாமல் அணியில் இருந்து விலகியே உள்ளார். அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பும்ரா 6 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. மீண்டும் பழைய ஃபார்மில் பும்ராவை பார்க்க கொஞ்ச நேரம் தேவைப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கான அணியில் சேர்க்க பும்ராவை பொருட்படுத்த தேவையில்லை. அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்று யாருக்கு தெரியாது. அதனால் உமேஷ் தான் அணியில் இடம்பெறுவார் என்று கூறியுள்ளார்.