ஷேன் வார்னே படைத்த 5 சாதனைகள்

ஷேன் வார்னே படைத்த 5 சாதனைகள்
ஷேன் வார்னே படைத்த 5 சாதனைகள்

ஷேன் வார்னே உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது 'லெக் ஸ்பின்' பவுலிங் இன்றும் பல இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக விளங்குகிறது. கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் படைத்த 5 சாதனைகளைப் பாப்போம்.

700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்:

700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஷேன் வார்னே. 1992-2007 காலங்களில் சுமார் 145 டெஸ்ட் ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர், மொத்தம் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

1000 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர்:

டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்த வார்னே, சர்வதேச கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள் என மொத்தம் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகள்:

டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர் ஷேன் வார்னே. 2005ஆம் ஆண்டு 15 போட்டிகளில் களமிறங்கிய அவர் 96 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 18 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

சதம் இல்லாமல் அதிக ரன்கள் குவித்த வீரர்:

வரலாற்றில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷேன் வார்னே. 339 சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் 4172 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை. அதிகபட்சமாக 2001ல் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்

முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஷேன் வார்னே. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் இளம் வீரர்களை வைத்து கோப்பையை வென்று அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் முதல்முதலாக ஏலம் எடுக்கப்பட்ட வீரரும் ஷேன் வார்னே தான் என்பது குறிப்பிடத்தக்கது

.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com