ரிக்கி பாண்டிங்கும், கங்குலியும்…. பிரமிக்கும் பிரித்வி ஷா

ரிக்கி பாண்டிங்கும், கங்குலியும்…. பிரமிக்கும் பிரித்வி ஷா

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கடந்த ஐ பி எல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கடந்த ஐ பி எல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியில் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், அணியின் ஆலோசகராக சௌரவ் கங்குலியும்   செயல்பட்டனர். 

டெல்லி அணியில் விளையாடிய அனுபவம் குறித்து பிரித்வி ஷா கூறுகையில் ”கிரிக்கெட் ஜாம்பவன்களான ரிக்கி பாண்டிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் உள்ள அணியில் விளையாடி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், இருவருக்கும் 15 முதல் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் அனுபவம் இருப்பதால் அவர்களுக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்கள் தெரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து கிரிக்கெட்டை எவ்வாறு மனதளவில் எதிர்கொள்வது என்றும் அழுத்தமான நேரத்தில் எவ்வாறான ஆட்டத்தை வெளியிட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டுள்ளேன்” கூறியுள்ளார். 

அத்துடன் இளம் வீரரான எனக்கு ஐ பி எல் போன்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போழுது தடுமாற்றம் ஏற்படும். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காரணம் பாண்டிங் மற்றும் கங்குலி தான்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com