பும்ராவின் பந்துவீச்சு! ராக்கெட் அறிவியல் ரகசியம்!!

பும்ராவின் பந்துவீச்சு! ராக்கெட் அறிவியல் ரகசியம்!!
பும்ராவின்  பந்துவீச்சு! ராக்கெட் அறிவியல் ரகசியம்!!

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.   

பும்ரா,  இந்தியா உட்பட வெளிநாடுகளில் பங்கேற்ற பல போட்டிகளிலும், ஐ பி எல் தொடரில் மும்பை அணிக்காவும்,  தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

அத்துடன் 145 kmph வேகத்தில் வீசி சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றுள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இவர் ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் அவரது ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

 இந்நிலையில் கான்பூரில் உள்ள IITயின் பேராசிரியர் சஞ்சய் மிட்டல் பும்ராவின் பந்துவீச்சு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் பும்ரா பந்துவீச்சு பின்னணியில் ராக்கெட் அறிவியல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன்படி பும்ராவின் வித்தியாசமான செய்கையால் மேக்னஸ் விளைவால் பந்தில் திருப்பம் ஏற்பட்டு ஒரு டிப் உருவாகுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதனாலேயே பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் போது கூடுதல் பவுன்ஸ் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com