மார்ச் மாதம் கம்பேக் கொடுக்கும் பும்ரா? ரோகித் கொடுத்த அப்டேட்

காயம் காரணமாக ஓய்வில் உள்ள இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் எப்போது விளையாடுவார் என்பது குறித்த அப்டேட்டை கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக சுமார் 5 மாதங்களாக ஓய்வில் இருந்த பும்ரா, தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலகினார். இதனால் அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியன் - இந்தியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்களில் பும்ரா பங்கேற்க வாய்ப்புள்ளதாக இந்திய கேப்டன் ரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

சோப்ரா ரசித்த கேமிரா!


CSK க்கு என்ன தான் ஆச்சு? சோகத்தில் Fans
